பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

0
84
#image_title

பெண்களே உங்களுக்கு 30 வயதுக்கு மேல் ஆகி விட்டதா!!? அப்போ இந்த சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க!!!

30 வயதிற்கு மேல் ஆகிய பெண்கள் அனைவரும் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சத்து நிறைந்துள்ள உணவு வகைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உணவுகள் பல வகைபடும். துரித உணவுகள், நீராவியில் வேக வைக்கப்படும் உணவுகள், பொறித்த உணவுகள், சாப்பாடு என்று பல வகையான உணவுகள் உள்ளது. இந்த உணவுகளில் ஒவ்வொன்றிலும் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளதோ அதே அளவுக்கு தீமைகளும் இருக்கின்றது.

அதாவது அளவுக்கு மீறினாள் அமுதம் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் எந்த ஒரு உணவையும் அளவுக்கு அதிமாக சாப்பிடும் பொழுது அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் துரித உணவுகள் சாப்பிடுகிறார்கள். துரித உணவுகளில் சத்துக்கள் எதுவும் இருக்காது. தீமைகள் மட்டும் தான் இருக்கின்றது. 30 வயதிற்கு மேல் ஆன அனைவரும் இந்துக்களை ஏற்படுத்தும் துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக அனைவரும் இந்த பதிவில் கூறப்படும் உணவுகளை சாப்பிடலாம். முக்கியமாக 30 வயதிற்கு மேல் ஆன பெண்கள் அனைவரும் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சத்துள்ள உணவு உணவுகளை சாப்பிடலாம். அது என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.

30 வயதிற்கு மேல் ஆன பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…

பெர்ரி பழ வகைகள்…

பெர்ரி பழங்கள் பல வகைபடும். ஸ்ட்ராபெர்ரி, புளூ பெர்ரி, பிளாக் பெர்ரி என்று பல வகைகள் இருக்கின்றது. இந்த பெர்ரி பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே 30 வயதிற்கு மேல் ஆகும் பெண்கள் அனைவரும் இந்த பெர்ரி பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த பெர்ரி பழங்களை யோகர்ட் அல்லது ஸ்மூத்தியுடன் எடுத்துக் கொள்ளலாம்.

மீன் வகைகள்…

30 வயதுக்கு மேல் ஆகும் பெண்கள் அனைவரும் மீன் வகைகளை சாப்பிட வேண்டும். புரதமும், நல்ல கொழுப்புகளும் மீன் வகைகளில் அதிகளவில் இருக்கின்றது. முடிந்த வரை மீன் வகைகளை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம்.

பச்சை இலை காய்கறிகள்…

30 வயதுக்கு மேல் ஆகும் பெண்கள் கண்டிப்பாக உணவில் பச்சை இலை காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை இலை காய்களிகளில் பல வகையான விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த பச்சை இலை காய்கறிகளை நாம் பொரியல் செய்து குழம்பு வைத்து சாப்பிடலாம். அதே போல கீரை வகைகளையும் பெண்கள் எடுத்துக் கொள்ளலாம்.

நட்ஸ் வகைகள்…

30 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் அனைவரும் நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். அதாவது பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஆரோக்கியம் நிறைந்த நல்ல கொழுப்புகள் உள்ளது. மேலும் இதில் புரதங்களும் உள்ளது.

ஆலிவ் ஆயில்…

30 வயதுக்கு மேல் இருக்கும் பெண்கள் அனைவரும் ஆலிவ் ஆயில் தங்கள் உறவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது உணவு செய்யும் பொழுது ஆலிவ் எண்ணெயை சமையல் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இந்த ஆலிவ் எண்ணெயில் விட்டமின் ஈ சத்து அதிகளவில் உள்ளது.

Previous articleஅடேங்கப்பா.. தோப்புகரணம் போட்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..
Next articleதலைமுடி கிடுகிடுவென வளர வேண்டுமா? அப்போ சூப்பரான மெசேஜ்..