மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!!

0
79
#image_title

மீன் மசாலா உதிராமல் பொரிக்க அருமையான வழி இதோ!!

மீனை வைத்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் ருசியாக இருக்கும்.மீன் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதும் கூட.இந்த மீனை ப்ரை செய்து சாப்பிடுவது என்றால் அலாதி பிரியமா? அப்போ இப்படி ஒரு முறை மீன் மசால் செய்து ப்ரை பண்ணி பாருங்கள்.மிகவும் சுவையாகவும்,அதேபோல் மசாலாக்கள் பிரியாமல் மீனுடன் ஒட்டி கொள்ளும்.இதற்காக கடையில் ப்ரை மசால் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்து விடலாம்.

தேவையானப் பொருட்கள்:-

*மீன் – அரை கிலோ

*எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

*சின்ன வெங்காயம் – 10 முதல் 12

*இஞ்சி – ஒரு துண்டு

*பூண்டு – 10 பற்கள்

*கறிவேப்பிலை – 1 கொத்து

*மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

*மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*எலுமிச்சம் பழச்சாறு – 3 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.பின்னர் அதில் மீன் துண்டுகளை போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து மீனை பிரட்டவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 1 துண்டு இஞ்சி,12 சின்ன வெங்காயம்,10 பூண்டு பற்கள்,மிளகாய் தூள் 1 தேக்கரண்டி,மிளகுத்தூள் 1 தேக்கரண்டி,கருவேப்பிலை 1 கொத்து மற்றும் தேவையான அளவு உப்பு மைய்ய அரைத்து கொள்ளவும்.

இந்த அரைத்த விழுதை சுத்தம் செய்து வைத்துள்ள மீனில் சேர்க்கவும்.அடுத்து 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து மீனை நன்கு பிரட்டி எடுக்கவும்.இதை 30 நிமிடம் ஊறவைக்கவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் தயார் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும்.இந்த முறையில் மீன் மசாலா செய்து ப்ரை செய்தால் சுவையாகவும் மசாலா உதிராமலும் இருக்கும்.

Previous articleஇது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!
Next articleமருத்துவ குணங்கள் நிறைந்த “பூண்டு”!! அட நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை வாரி வழங்குகிறதா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!