இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

0
205
#image_title

இது தெரியுமா? பூரான் கடித்தால் முதலில் இதை தான் செய்ய வேண்டும்!!

பூரான் கடித்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியம்.பூரான் விஷம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தது என்றாலும் உடல் உபாதை சற்று அதிகமாக இருக்கும்.பூரான் கடி ஒவ்வவாமை,உடலில் தடுப்பு உள்ளிட்டவற்றை ஏற்படும் அபாயம் கொண்டது.

பூரான் கடித்த நபர்கள் பதட்ட படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*குப்பை மேனி இலை – 1 கைப்பிடி

*கல் உப்பு – 1/4 கைப்பிடி

*மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் குப்பைமேனி இலை சிறிதளவு எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் இதை ஒரு உரலில் போட்டு கொள்ளவும்.இதோடு கல் உப்பு 1/4 கைப்பிடி அளவு மற்றும் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.பின்னர் குழந்தையின் சிறுநீர் சிறிதளவு சேர்த்து அரைக்கவும்.

இதை உடல் முழுவதும் பூசிக் கொள்ளவும்.பின்னர் 1/2 மணி நேரத்திற்கு பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து 3 நாட்கள் பின்பற்றி வர உடலில் பூரானுடைய விஷம் முழுவதும் முறிந்து தடிப்புகள் மறையத் தொடங்கும்.

பூரான் கடி குணமாக மேலும் சில வழிகள்:-

*மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலை 1 மற்றும் மிளகு 5 எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.இந்த விழுதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விழுங்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் உடலில் பூரான் விஷம் முறியும்.

*அதேபோல் 1 கைப்பிடி குப்பைமேனி இலை மற்றும் மஞ்சள் சிறிதளவு எடுத்து அரைத்து பூரான் கடித்த இடத்தில் தடவ வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் விஷம் முறியும்.

*பூரான் கடித்த இடத்தில் சிறிதளவு மஞ்சள் தூள் வைத்தால் பூரான் விஷம் உடலில் மற்ற இடங்களுக்கு பரவாமல் இருக்கும்.