உடல் எடையை குறைக்க உதவும் குடை மிளகாய்!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!? 

Photo of author

By Sakthi

உடல் எடையை குறைக்க உதவும் குடை மிளகாய்!!! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன!!?
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் குடை மிளகாயில் உள்ள சத்துக்கள் என்னென்ன, இந்த குடை மிளகாய் உள்ள நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
தாம் பொதுவாக சமையலுக்கு சாதாரணமாக இருக்கும் பச்சை மிளகாயை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த பச்சை மிளகாயில் பல சத்துக்கள் இருக்கின்றது என்றாலும் குடை மிளகாயை நாம் பயன்படுத்தும் பொழுது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கின்றது.
குடை மிளகாயில் மஞ்சள் குடை மிளகாய், சிவப்பு குடை மிளகாய், பச்சை குடை மிளகாய் என்று மூன்று வண்ணங்களில் இருக்கின்றது. ஒவ்வொரு வண்ணக் குடை மிளகாயும் ஒவ்வொரு பாதிப்பை குணப்படுத்தும். ஒவ்வொரு விதமான சத்துக்கள் கொண்டிருக்கும்.
இந்த மூன்று வண்ணங்களிலும் சிறந்தது மற்றும் பல சத்துக்கள், பல நன்மைகளை அளிக்கக் கூடியது சிவப்பு குடை மிளகாய் ஆகும். சிவப்பு குடை மிளகாயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் உள்ளது.  சிவப்பு குடை மிளகாயில் லைக்கோபின் சத்து உள்ளது. சிவப்பு குடை. மிளகாயில் ஃபோலெட் மற்றும் வைட்டமின் பி6 சத்துக்களும் காணப்படுகின்றது. மேலும் இதில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. தற்பொழுது சிவப்பு குடை மிளகாய் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
சிவப்பு குடை மிளகாய் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!
* சிவப்பு குடை மிளகாயில் லைக்கோபின் என்னும் சத்து உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
* இந்த சிவப்பு குடை மிளகாய் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பாதிப்புகளை இது தடுக்கும்.
* சிவப்பு குடை மிளகாய் நமது உடல் எடையை குறைக்க உதவுகின்றது. எனவே உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் சிவப்பு குடை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* வெண்டைக்காய் மட்டுமல்ல. நமது மூளையின் ஆரோக்கியத்தை சிவப்பு குடை மிளகாயும் மேம்படுத்தும்.
* குடை மிளகாயை நாம் புற்று நோய் ஏற்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தலாம். குடை மிளகாயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக சிறுநீர்ப்பை, இணையம், புரோஸ்டேட், மார்பகப் புற்றுநோய் போன்றவற்றை தடுக்கலாம்.
* இந்த குடை மிளகாயை பயன்படுத்தி உடலில் ஏற்படும் அனைத்து வகையான வலிகளையும் குறைக்கலாம். உடல் வலி, மூட்டு வலி, கால் வலி, கை வலி போன்றவற்றை குணப்படுத்தலாம்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இந்த சிவப்பு குடை மிளகாயை எடுத்துக் கொள்ளலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* இதற்கு மட்டுமில்லாமல் மேலும் கூந்தல் நன்கு வளர்ச்சி அடைவதற்கும் இதில் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம்.
மூன்று வகையான அதாவது மஞ்சள் நிற குடை மிளகாய், சிவப்பு நிற குடை மிளகாய்,  பச்சை நிற குடை மிளகாய் மூன்றையும் நாம் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். இந்த குடைமிளகாய்களை  சாண்ட்விச், சாலட், பிரைட் ரைஸ், குழம்பு, பொறியல் போன்ற உணவுகளில் சேர்த்து பயன்படுத்தலாம்.