காலையில் கஷ்டப்படாமல் காலைக் கடனை முடிக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில எளிமையான டிப்ஸ்!!!
காலை நேரத்தில் சிக்கல் இல்லாமல் காலைக் கடனை கழிக்க இந்த பதிவில் சில எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை தினமும் பின்பற்றினால் சிக்கலை இல்லாமல் காலை கடனை முடித்து விடலாம்.
மலச்சிக்கல் என்பது மனிதனுக்கு பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. ஒரு நபர் ஒரு நாளைக்கு மூன்று வேலை மலம் கழிக்க வேண்டும். குறைந்தது இரண்டு முறையாவது மலம் கழிப்பது அவசியம். ஒரு முறையும் கூட மலம் கழிக்க முடியாமல் அவதிப்படும் நபர்களுக்கு பல பாதிப்புகள் வரிசையாக காத்திருக்கின்றது.
நம்மில் பெரும்பாலும் அதிக நபர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். இந்த மலச்சிக்கல் பிரச்சனை தீர்ப்பதற்கு மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவார்கள். இனி அந்த மருந்து மாத்திரைகள் எல்லாம் வேண்டாம். இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த டிப்ஸ் காலைக் கடனை சிக்கல் இல்லாமல் முடிக்க உதவியாக இருக்கும்.
காலை கடனை சிக்கல் இல்லாமல் தவிர்க்கும் வழிமுறைகள்…
* முதலாவதாக நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
* தினமும் 30 நிமிடம் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* நார்ச்சத்து அதிகம் உள்ள பீன்ஸ் போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு முறையும் உணவு சாப்பிடும் பொழுது இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்.
* ஒவ்வொரு வேலையும் உணவு உண்ட பின்பு நடை பயிற்சி செய்ய வேண்டும். இதனால் ஜீரணம் மிக எளிமையாக நடைபெறும்.
* தினமும் பழம் சார்ந்த ஜூஸ் வகைகளைகுடித்து வரலாம்.
* வெதுவெதுப்பான பால் சேர்க்கப்படாத டீ குடிக்க வேண்டும்.
* முக்கியமாக நறுக்குத் தீனி உண்ணும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
* இறுதியாக முக்கியமான வழிமுறை இரவில் நேரத்திற்கு தூங்க வேண்டும்.