இதை ஒரு நாள் மட்டும் வையுங்கள்.. வீட்டில் ஒரு எலி கூட இருக்காது!! 100% பலன் இருக்கு!!
நம்மில் பலர் வீடுகளில் எலிகள் தொல்லை அதிகம் இருக்கும்.தக்காளி முதல் பேப்பர் வரை அனைத்தையும் உண்ணும் இந்த எலிகளால் நமக்கு தேவையில்லா தலைவலி தான் ஏற்படும்.இதை ஒழிக்க நாமும் பல வழிகளை முயற்சி செய்திருப்போம்.ஆனால் நமக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
இப்படி நம்மை பாடாய் படுத்தி வரும் எலிகளை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் கீழ் உள்ள செய்முறை விளக்கத்தை பாலோ செய்து பாருங்கள் ஒரே நாளில் வீட்டில் உள்ள அனைத்து எலிகளும் வெளியேறி விடும்.
தேவையான பொருட்கள்:-
*கோதுமை மாவு – 2 தேக்கரண்டி
*நாட்டு சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி
*தீப்பெட்டி(தீ குச்சி) – 15
செய்முறை:-
முதலில் ஒரு தட்டு எடுத்து அதில் 2 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.கோதுமை மாவு இல்லையென்றால் பொட்டுக்கடலை மாவு,சோள மாவு என்று எதுவேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் அதில் 1 1/2 தேக்கரண்டி நாட்டு சர்க்கரை சேர்க்கவும்.வெள்ளை சர்க்கரை சேர்க்கக் கூடாது.பிறகு தீ குச்சி 10 அல்லது 15 எடுத்து அதன் மருந்தை கோதுமை கலவையில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பின்னர் இதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் எலிகள் அதை உண்ணத் தொடங்கும்.பின்னர் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டு செத்து மடிந்து விடும்.இதனால் எலி தொல்லைக்கு ஒரு முடிவு கட்டி விடலாம்.
எலிகளை விரட்ட மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*பொட்டுக்கடலை மாவு – 1/4 கப்
*சமையல் சோடா – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் பொட்டுக்கடலை 3 அல்லது 4 தேக்கரண்டி அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும்.
பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து சமையல் சோடா 1 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்த்து கலந்து விடவும்.பின்னர் 2 அல்லது 2 1/2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.இந்த உருண்டைகளை வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கவும்.இந்த உருண்டைகளின் வாசம் எலிகளை கவரச் செய்யும்.
பின்னர் அதை எலி உண்ட பின்னர் வயிறு உபசமாகத் தொடங்கும்.சிறிது நேரத்தில் செத்து மடிந்து விடும்.இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் ஒரு எலி கூட இருக்காது.