இளம் வயதில் வரும் நரையை சரி செய்ய எளிய வழி!! கடைபிடித்து பலனை அடையுங்கள்!!

Photo of author

By Divya

இளம் வயதில் வரும் நரையை சரி செய்ய எளிய வழி!! கடைபிடித்து பலனை அடையுங்கள்!!

இன்றைய வாழ்க்கை முறையில் இளம் வயதினருக்கு நரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது.இதற்கு வாழ்க்கை முறையும்,உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம்.என்னதான் முகம் இளமை தோற்றத்தில் இருந்தாலும் ஒரு முறை வெள்ளை முடி எட்டி பார்த்து விட்டதென்றால் போதும் மொத்த அழகும் குறைந்து விடும்.

இதற்காக ரசாயன பொருட்களை பயன்படுத்தும் முடிவை கை விட்டு இயற்கை முறையில் கிடைக்க கூடிய பொருட்களை பயன்படுத்தி முடியை கருமை நிறத்திற்கு மாற்ற முயற்சி செய்யுங்கள்.உணவில் சத்தான காய்கறிகள்,பழங்கள்,நட்ஸ் ஆகியவற்றை எடுத்து வருவதினால் உடலுக்கும்,கூந்தலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்த்து வாரத்திற்கு 2 முறை மட்டும் அதனை செய்யுங்கள்.தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் வைக்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.இது போன்று செய்வதால் இளநரை பாதிப்புகள் ஏற்படாது.

தேவையான பொருட்கள்:-

*கறிவேப்பிலை – 1 கப்

*சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 கப்

செய்முறை:-

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 1 கப் தேங்காயெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்துவதும்.பின்னர் 1 கப் கறிவேப்பிலை இலைகளை அதில் சேர்த்து கருகும் வரை பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து கொள்ளவும்.

இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.தயார் செய்து வைத்துள்ள இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வருவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் இளநரை கருமையாக மாறி விடும்.கருவேப்பிலைக்கு முடியை கருமை நிறத்திற்கு மாற்ற கூடிய ஆற்றல் இருக்கிறது.