நொடியில் “மூட்டு வலி” பறந்து போக இப்படி செய்யுங்கள்! அனுபவ உண்மை!!
இன்றைய கால வாழ்க்கை சூழலில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக மூட்டு வலி இருக்கிறது.இந்த பாதிப்பு ஏற்பட தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும்.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த மூட்டு வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது.இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலி முற்றிலும் குணமாகிவிடும்.
தீர்வு: 1
தேவையான பொருட்கள்:-
*கருப்பு எள் – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முந்தின நாள் இரவு ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு கருப்பு எள் சேர்த்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் எள் ஊறவைத்திருக்கும் தண்ணீரை குடித்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி குணமாகும்.
தீர்வு: 2
தேவையான பொருட்கள்:-
*தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
*கற்பூரம் – 1
செய்முறை:-
அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் மிதமான தீயில் சூடுபடுத்தவும்.பின்னர் அதில் 1 கற்பூரம் சேர்த்து கரைத்து எண்ணெய் சூடேறியதும் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் முழங்கால் மூட்டு பகுதியை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்து ஒரு காட்டன் துணி கொண்டு துடைத்து கொள்ளவும்.
அடுத்து தயார் செய்து வைத்துள்ள எண்ணெயை தேவையான அளவு எடுத்து மூட்டு பகுதிகளில் ஊற்றி மஜாஜ் செய்து கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மூட்டு வலி பாதிப்பு விரைவில் சரியாகும்.
தீர்வு : 3
தேவையான பொருட்கள்:-
எலுமிச்சை சாறு – 3 தேக்கரண்டி
சுக்கு – ஒரு துண்டு
செய்முறை:-
ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு துண்டு சுக்கு எடுத்து ஒரு உரலில் போட்டு இடித்துக் தூள் செய்து கொள்ளவும்.இந்த சுக்கு துளை எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
அடுத்து மூட்டுகளில் வலி,வீக்கம் இருக்கும் இடங்களில் இந்த பேஸ்டை தடவி நன்கு மஜாஜ் செய்யவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி,வீக்கம் சில நாட்களில் சரியாகி விடும்.