இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

0
61
#image_title

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது.உணவில் தனி ருசியை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய இடமுண்டு.தக்காளியில் பல வகைகள் இருக்கிறது.இதை நாட்டு தக்காளி,ஹைப்ரீட் தக்காளி என்று இரு வகைகளாக அடங்குகிறது.

ஒரு சில சமயம் தக்காளி கிலோ ரூ.10க்கு விறக்கப்படும்.ஒரு சில சமயம் கிலோ ரூ.200 என்று தக்காளி விற்ற கதையும் இருக்கிறது.தக்காளி விலை மிகவும் மலிவாக இருக்கும் பொழுது அதனை அதிகளவில் வாங்கி விடுகிறோம்.இதனால் அனைத்து தக்காளிகளும் உடனடியாக விடுகிறது.ஆனால் சில வழிமுறைகளை கடைபிடித்தால் தக்காளி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

*ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அதில் வீட்டில் இருக்கும் தக்காளி பழங்களை போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவவும்.பிறகு இந்த தக்காளி பழங்களை ஒரு தட்டிற்கு மாற்றி காட்டன் துணி கொண்டு தக்காளியில் ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து கொள்ளவும்.அடுத்து தக்காளி பழங்களின் மேல் சிறிதளவு எண்ணெய்யை தடவி கொள்ளவும்.இவ்வாறு செய்தால் தக்காளி பழங்கள் நீண்டநாட்களுக்கு கெடமால் இருக்கும்.

*ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அதில் வீட்டில் இருக்கும் தக்காளி பழங்களை போட்டுக் கொள்ளவும்.பின்னர் அதில் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவவும்.பிறகு இந்த தக்காளி பழங்களை ஒரு தட்டிற்கு மாற்றி காட்டன் துணி கொண்டு தக்காளியில் ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து கொள்ளவும்.

பின்னர் தக்காளியின் காம்பு பகுதியில் செலோடேப்பை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனின் மீது ஒட்டி கொள்ளவும்.இவ்வாறு செய்வதன் காரணம் தக்காளிக்குள் காற்று புகாது என்பது தான்.இதனால் தக்காளி நீண்ட நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும்.

*ஒரு பெரிய பாத்திரம் எடுத்து அதில் வீட்டில் இருக்கும் தக்காளி பழங்களை போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவவும்.பிறகு இந்த தக்காளி பழங்களை ஒரு தட்டிற்கு மாற்றி காட்டன் துணி கொண்டு தக்காளியில் ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து கொள்ளவும்.

பிறகு இதை வட்ட வடிவில் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.தக்காளியில் உள்ள விதை மற்றும் தோலை நீக்கிவிடவும்.பின்னர் இந்த நறுக்கிய தக்காளியை பேக்கிங் தாளில் வைக்கவும்.பிறகு ப்ரிட்ஜில் ப்ரீசரில் இந்த பேக்கிங் தாளை வைக்கவும்.இந்த முறையை கடைபிடித்தாலும் தக்காளி நீண்டநாட்களுக்கு கெடமால் இருக்கும்.