உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!!

0
171
#image_title

உங்களிடம் உடைத்த தேங்காய் அதிகளவில் இருக்கிறதா? அப்போ இவ்வாறு செய்து பாருங்கள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்!!

*அதிகளவு உடைத்த தேங்காய் இருந்தால் அவற்றை கெட்டு போகாமல் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்த முதலில் தேங்காய் துருவலை எடுத்துக் கொள்ளவும். பின்னர் உடைத்த தேங்காய்களை அதில் துருவிக் கொள்ளவும்.

அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதை ஐஸ் க்யூப் வைக்கும் ட்ரேயில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும். தேவைப்படும் பொழுது வெளியில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

*அதேபோல் உடைத்த தேங்காயை நீண்ட நாட்கள் வரை பயன்படுத்த மற்றொரு வழி உள்ளது. உடைத்த தேங்காயில் சிறிதளவு கூட ஈரப்பதம் இல்லாதவாறு துடைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் துருவி வைத்துள்ள தேங்காயை மிதமான தீயில் நன்கு வதக்கி கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து இவற்றை நன்கு ஆற விடவும். பிறகு ஒரு கண்ணாடி ஜாரில் வதக்கி ஆறவைத்துள்ள தேங்காய் துருவலை போட்டு சேமித்து கொள்ளவும். எவ்வாறு செய்தால் தேங்காயை நீண்ட நாட்கள் வரை சமையலுக்கு உபயோகிக்க முடியும்.

*உடைத்த தேங்காய் அதிகளவில் இருந்தால் அதை ஒரு காட்டன் துணியில் ஈரம் இல்லாதவாறு துடைத்து துடைத்து கொள்ளவும். பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு ஜாடியில் போட்டு வைக்கவும். இவ்வாறு செய்தால் தேங்காய் கெடாமல் இருக்கும்.

*அதேபோல் உடைத்த தேங்காய் இருந்தால் அதை கேஸ் அடுப்பில் வைத்து தேங்காய் ஓடு கருகும் வரை சூடுபடுத்தி கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த தேங்காயை தண்ணீருக்குள் போட்டு விடவும். சூடு ஆறியதும் தேங்காயை தனியாகவும், தேங்காய் ஓட்டை தனியாகவும் பிரித்து கொள்ளவும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கண்ணடி ஜார் அல்லது டப்பாவில் போட்டு ப்ரிட்ஜில் ஸ்டோர் கொள்ளவும். இவ்வாறு செய்தால் தேங்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

Previous articleசெல்வத்தை வாரி வழங்கும் மகாலட்சுமி தாயாரை வீட்டில் நிரந்தரமாக குடி வைக்க எளிய வழிகள்!!
Next articleஅஜீரணம் பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையல்!!! இதை எவ்வாறு செய்வது!!?