அஜீரணம் பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையல்!!! இதை எவ்வாறு செய்வது!!?

0
38
#image_title

அஜீரணம் பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையல்!!! இதை எவ்வாறு செய்வது!!?

அஜீரணக் கோளாறு பிரச்சனையை சரிசெய்யும் பச்சை சுண்டைக்காய் துவையலை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் தேவை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அஜீரணம் என்பது நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றில் அப்படியே இருப்பதை அஜீரணம் என்று அழைக்கின்றோம். அஜீரணம் இருந்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை ஏற்படும். இதை சரி செய்ய நாம் பல மருந்துகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இந்த மருந்துகளை எல்லாம் ஓரம் ஒதுக்கி விட்டு இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் பச்சை சுண்டைக்காய் துவையல் செய்து சாப்பிட்டால் அஜீரணம் என்பது ஏற்படாது. இந்த பச்சை சுண்டைக்காய் துவையல் தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றிஉயம் எவ்வாறு தயார். செய்வது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

பச்சை சுண்டைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்…

* பச்சை சுண்டைக்காய் – ஒரு கப்
* சீரகம் – ஒரு ஸ்பூன்
* கடலை பருப்பு – 3 ஸ்பூன்
* கருவேப்பிலை – இரண்டு கொத்து
* புளி – நெல்லிக்காய் அளவு
* இஞ்சி – 2 இன்ச்
* சிவப்பு மிளகாய் – 6
* எண்ணெய் – 2 ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
* கடுகு – அரை ஸ்பூன்
* உளுந்து – அரை ஸ்பூன்
* நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை…

முதலில் எடுத்து வைத்துள்ள பச்சை சுண்டைக்காய்களை இரண்டாக நறுக்கி கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாலி வைத்து அதில் நல்லெண்ணெய் விலை சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பச்சை சுண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மீண்டும் வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் சீரகம், புளி, கடலைப்பருப்பு, கருவேப்பிலை இவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இஞ்சியை தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சேர்ந்திருக்கும் இஞ்சியானது நன்கு சுருளும் வரை வதக்க வேண்டும். வறுத்த பிறகு இதில் எடுத்து வைத்துள்ள காய்ந்த சிவப்பு மிளகாயை இரண்டாக பிரித்து இதில் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் இதில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள பச்சை சுண்டைக்காய்களையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சுண்டைக்காய்களை வெள்ளை நிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். அப்பொழுதுதான் சுண்டைக்காயின் கசப்பு தெரியாது.

பின்னர் இதை இறக்கி ஆற வைத்து ஒரு. மிக்சி ஜாகிர் அரைத்த இந்த கலவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பை பற்ற வைத்து மீண்டும் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கொள்ள வேண்டும். இதை தாளித்து அந்த துறையில் சேர்த்து நாம் சாப்பிடலாம்.

இந்த பச்சை சுண்டைக்காய் துவையலை சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். இதனால் அஜீரணக் கைமாறு பிரச்சனைகள் நீங்கும். மேலும் வயிற்றில்ஸுள்ள புழுக்கள் அனைத்தும் அழிந்து வெளியேறுகின்றது.