செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!!

0
106
#image_title

செரிமானத்தை அதிகரிக்க உதவும் 6 வகையான தண்ணீர்!!!

நமக்கு செரிமான மண்டலத்தையும் செரிமானத்தையும் மேம்படுத்த உதவி செய்யும் ஆறு வகையான தண்ணீர்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

வினிகர் நீர்…

வினிகர் செரிமானத்தை மேம்படுத்த உதவும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் உள்ள பேச்சுக்களை நீக்கி செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்கின்றது. எனவே குடிக்கும் தண்ணீரில் 2 அல்லது 3 ஸ்பூன் வினிகரை கலந்து குடித்து வரலாம்.

எலுமிச்சை நீர்…

எலுமிச்சையும் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். எலுமிச்சை நீரில் அதிகளவு விட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது அதிகளவு செரிமான நொதிகளை உருவாக்க உதவி செய்கின்றது. எனவே குடிக்கும் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பிழிந்து குடிக்கலாம்.

புதினா நீர்…

புதினா நமது உடலில் பித்த ஓட்டத்தையும், உமிழ்நீர் சுரப்பிகளின் செயல்பாடுகளையும் மேம்படுத்த உதவி செய்கின்றது. புதினா நாம் சாப்பிடும் உணவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களையும் எளிதில் உறிஞ்சுவதற்கு பயன்படுகின்றது. மேலும் இது செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே நாம் குடிக்கும் தண்ணீரில் புதினா இலைகளை சேர்த்து குடிக்கலாம்.

வெள்ளரிக்காய் நீர்…

வெள்ளரிக்காயும் நமது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் செரிமானத்தை எளிமையாக நடத்த உதவி செய்கின்றது. வெள்ளரிக்காய் ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கு பயன்படுகின்றது. எனவே நாம் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெள்ளரிக்காயை மெல்லியதாக நறுக்கி அதில் சேர்த்து குடிக்கலாம்.

இலவங்க நீர்…

இலவங்கப் பட்டை நமது செரிமான மண்டலத்திற்கு வலிமை கொடுத்து செரிமானத்தை எளிமையாக்குகின்றது. இலவங்கப் பட்டை நமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கின்றது. மேலும் நோய்த் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. எனவே நாம் குடிக்கும் நீரில் ஒரு குச்சி இலவங்கப் பட்டையை சேர்த்து குடிக்கலாம்.

இஞ்சி நீர்…

இஞ்சி நமது உடலில் ஏற்படும் பல நோய்த் தொற்றுகளை குணப்படுத்தும் மருந்துப் பொருளாக இருக்கின்றது. உடலில் ஏற்படும் பிடிப்புகள், வாயு, வீக்கம், அஜீரணம் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய உதவி செய்கின்றது. எனவே இஞ்சியை எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் குடிக்கலாம். இதன் மூலமாக செரிமானம் எளிமையாக நடக்கின்றது.

Previous articleஉடல் எடையை குறைத்து கட்டுக்குள் வைக்க வேண்டுமா!!? அப்போது இந்த உணவுகளை சாப்பிடுங்க!!!
Next articleகருகருவென கூந்தல் வளர வேண்டுமா!!? செம்பருத்தி எண்ணெயை தயார் செய்து பயன்படுத்துங்க!!!