மலச்சிக்கல்? ஒரே நாளில் உடலில் தேங்கி கிடந்த மொத்த மலத்தையும் வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!
நாம் உண்ணும் உணவு எளிதில் செரிக்க கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். அதேபோல் சத்துக்கள் நிறைந்தவையாக இருக்க வேண்டும். ஆனால் உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் மலசிக்கலாக மாறி நம்மை படுத்தி எடுக்கிறது.
நாம் உண்ணும் உணவில் உள்ள தேவையற்ற கழிவுகளாக மலம் வழியாக வெளியேறி வருகிறது. இந்நிலையில் அந்த தேவையற்ற கழிவுகள் உடலை விட்டு வெளியேறாமல் உள்ளேயே இருந்தால் நம் உடல் ஆரோக்கியமற்ற நிலைக்கு சென்று விடும். இதனால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படத் தொடங்கி விடும்.
மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-
*அளவுக்கு அதிகமாக உணவு உண்பது
*எளிதில் செரிமானம் ஆகாத உணவை உண்பது
*உடலுக்கு தேவையான நீரை பருகதாதது
*மலத்தை அடக்கி வைத்தல்
*உணவில் நார்ச்சத்து பயன்பாடு குறைதல்
*வயது முதிர்வு
*அதிகப்படியான மன அழுத்தம்
இவை அனைத்தும் மலசிக்கல் ஏற்பட பொதுவான காரணங்களாக சொல்லப்படுகிறது.
மலத்தை வெளியேற்றுவதற்காக நாம் செய்யும் தவறு:-
*சூடான காபி, தேநீர் பருகுதல்
*சிகரெட் புகைத்தல்
*அதிகளவு தண்ணீர் குடித்தல்
இந்த பழக்கத்தை கைவிட்டு இயற்கை முறையில் தீர்வு காண்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.
மலசிக்கல் அறிகுறி:-
*பசியின்மை
*குமட்டல் உணர்வு
*வயிற்று வலி
*வயிற்றுப் பிடிப்பு
இவைகள் அனைத்தும் உடலில் மலச்சிக்கல் பாதிப்பு இருக்கு என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.
மலச்சிக்கல் பாதிப்பை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்:
தேவையான பொருட்கள்:-
*விளக்கு எண்ணெய்- 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை:-
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றவும். அவற்றை சூடு படுத்தி அடுப்பை அணைக்கவும்.
பின்னர் இந்த சூடானான நீரை ஒரு டம்ளருக்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் 1 தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கவும். அதனோடு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கி பருகவும்.
இதை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இந்த பானத்தை குடித்த அடுத்த 15 நிமிடத்தில் உடலில் தேங்கி கிடந்த நாள்பட்ட மலம் வெளியேறத் தொடங்கும்.
விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலிக் அமிலம் உடலில் உள்ள மலத்தை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. அதேபோல் எலுமிச்சை செரிமான பாதிப்பை சரி செய்ய பெரிதும் உதவுகிறது. இதனால் விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.