மார்பு சளி? ஒரு துண்டு இஞ்சி போதும்!! நிமிடத்தில் மொத்த சளியும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

0
73
chest-cold-a-piece-of-ginger-is-enough-within-a-minute-all-the-mucus-will-dissolve-and-pass-out-through-the-stool-believe-it-is-true
chest-cold-a-piece-of-ginger-is-enough-within-a-minute-all-the-mucus-will-dissolve-and-pass-out-through-the-stool-believe-it-is-true

மார்பு சளி? ஒரு துண்டு இஞ்சி போதும்!! நிமிடத்தில் மொத்த சளியும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

சளி, இருமல் மழைக்காலங்களில் நிகழக்கூடிய காமன் வைரஸ் தொற்று ஆகும். இதை சாதாரண நோய் பாதிப்பு என்று அலட்சியப்படுத்துவதால் தான் அவை நாளடைவில் மார்பு சளியாக மாறி நம்மை படுத்தி எடுக்கிறது.

மார்பு சளி அறிகுறி:-

*தொண்டை வலி

*தலைவலி

*மூக்கு ஒழுகுதல்

*மூக்கடைப்பு

*மூச்சு விடுதலில் சிரமம்

*வறட்டு இருமல்

*சோர்வு

மார்பு சளி குணமாக கை வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 துண்டு

*துளசி – 15 முதல் 20 இலைகள்

*வெற்றிலை – 1

*தூயத் தேன் -தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரிலில் போட்டு அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு காட்டன் துணி அல்லது வடிகட்டி எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்த்து ஒரு பவுலுக்கு சாற்றை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் 10 முதல் 20 துளசி இலைகளை தண்ணீரில் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு மிக்ஸி ஜார் அல்லது உரலில் போட்டு எடுத்து கொள்ளவும். பின்னர் இதன் சாற்றை இஞ்சி சாறு வைத்துள்ள பவுலில் பிழிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து இதேபோல் ஒரு வெற்றிலை எடுத்து அதன் காம்பை நீக்கி கொள்ள வேண்டும். பின்னர் இதை உரலில் போட்டு இடித்துக் சாறு எடுத்து இஞ்சி + துளசி சாறு உள்ள பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் தேவையான அளவு தூயத் தேன் சேர்த்து கலக்கி பருகவும். இவ்வாறு செய்தால் மார்பில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.

இஞ்சி, துளசி, வெற்றிலை, தேன் பயன்கள்:-

இஞ்சி:

இவை அதிக காரத் தன்மை கொண்ட ஒரு பொருள். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடிய பொருளாக இவை இருக்கின்றது. இந்த இஞ்சியின் சாறு இருமல், செரிமானக் கோளாறு உள்ளிட்டவைகளை சரி செய்யும் தன்மையை கொண்டிருக்கிறது.

துளசி:

இவை அதிகளவு ஆன்டிபயாடிக் பண்புகளை கொண்டிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது.

துளசியில் இரும்புச் சத்து, துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, கே உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்து காணப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு இருக்கும் நபர்கள் இந்த துளசி இலைகளை சாப்பிட்டால் உரிய பலன் கிடைக்கும்.

வெற்றிலை:

அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை ஆகும். இதில் அதிகளவு ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்து இருக்கிறது. இவை சளி மற்றும் இருமல் பாதிப்பை நீக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் பொருளாக வெற்றிலை இருக்கிறது.

தேன்:

சளி, இருமலை குணமாக்க தேன் மிகவும் பயனுள்ள பொருளாக இருக்கின்றது. சளி இருமல் சரியாக நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளை விட தேன் சிறந்த தீர்வாக இருக்கும். உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் தேனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.