ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “ஆலப்புழா மீன் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

0
138
How to Make Kerala Style Alappuzha Meen Kulambu
How to Make Kerala Style Alappuzha Meen Kulambu

ஆளை சுண்டி இழுக்கும் கேரளா ஸ்டைல் “ஆலப்புழா மீன் குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

நம் அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு மீன். இவை உடலுக்கு அதிக சத்துக்களை வழங்குகிறது. கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சிகளை விட மீனில் ஒமேகா 3
உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கிறது. மீனில் ப்ரை, வறுவல், குழம்பு, பிரியாணி என பல வகைகள் இருக்கிறது. அந்த வகையில் கேரளா ஸ்டைல் ஆலப்புழா மீன் குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*மீன் – 1/4 கிலோ

*தேங்காய் எண்ணெய் – 50 கிராம்

*கடுகு – சிறிதளவு

*வெந்தயம் – சிறிதளவு

*தேங்காய் – 1/2 மூடி

*பச்சை மாங்கா – 1

*தக்காளி – 1

*மிளகாய் தூள் – 1 சிட்டிகை அளவு

*மஞ்சள் தூள் – 1 1/2 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் 1 பச்சை மாங்காய் எடுத்து அதை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து தேங்காய் எடுத்து அதேபோல் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகள், பாதி மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 சிட்டிகை அளவு மிளகாய் தூள், 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 1 தக்காளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து 1/4 கிலோ மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஊற விடவும்.

How to Make Kerala Style Alappuzha Meen Kulambu
How to Make Kerala Style Alappuzha Meen Kulambu

அடுத்த அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 50 கிராம் அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் கடுகு, வெந்தயம் சிறிதளவு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் சேர்த்து கலந்து விடவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொள்ளவும். அடுத்து மீதமுள்ள மாங்காய் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் கழுவி வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேக விட்டு அடுப்பை அணைக்கவும்.

Previous articleகேரளா ஸ்பெஷல் பிளாக் சாயா!! சுவையாக இருக்க காரணம் இந்த ஒரு பொருள் தான்!!
Next articleகேரள மக்களின் பேவரைட் “பழம் பொரிச்சது” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!