கேரள மக்களின் பேவரைட் “பழம் பொரிச்சது” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

0
45
How to make Pazham porichathu Recipe in
How to make Pazham porichathu Recipe in

கேரள மக்களின் பேவரைட் “பழம் பொரிச்சது” – இப்படி செய்தால் அதிக ருசியுடன் இருக்கும்!!

கேரளாவில் விளையும் பழ வகைகளில் ஒன்று நேந்திரம். இதை வைத்து செய்யப்படும் “பழம் பொரிச்சது” என்ற இனிப்பு வகை கேரளாவில் மிகவும் பேமஸான ஒன்றாகும். வாழைக்காயை மைதா + சர்க்கரை கலவையில் சேர்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கும் பண்டம் பழம் பொரிச்சது.

தேவையான பொருட்கள்:-

*மைதா மாவு – ஒரு கப்

*சீரகம் – சிறிதளவு

*நேந்திரம் பழம் (கனியாதது)  – 1

*சீனி – ஒரு கப்

*எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

பழம் பொரிச்சது செய்ய முதலில் கனியாத நேந்திரம் பழத்தை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு கப் மைதா மாவு எடுத்து ஒரு பவுலில் சலித்து வைத்துக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.

#image_title

பின்னர் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும். அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.

எண்ணெய் சூடேறியதும் நீள வாக்களில் நறுக்கி வைத்துள்ள நேந்திரம் பழத்தை தயார் செய்து வைத்துள்ள பஜ்ஜி கலவையில் தடவி சூடேறிக் கொண்டிருக்கும் போட்டு பொரித்தெடுக்கவும்.
இவ்வாறு செய்தால் கேரளா ஸ்டைல் பழம் பொரிச்சது மிகவும் சுவையாக இருக்கும்.