திடீரென்று ஏற்படும் மாரடைப்பை தடுக்க புதிய திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு

Photo of author

By Sakthi

திடீரென்று ஏற்படும் மாரடைப்பை தடுக்க புதிய திட்டம்! தமிழக அரசு அறிவிப்பு

Sakthi

Updated on:

திடீரென்று ஏற்படும் மாரடைப்பு பிரச்சனையை தடுக்க தமிழக அரசு ஹெல்த் வாக் சிஸ்டம் என்ற புதிய நடைமுறையை கொண்டுவரவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியதையும் கூறாததையும் திமுக தலைமையிலான தமிழக அரசு செய்து வருகின்றது. தேர்தலின் பொழுது சொல்லப்பட்ட ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வரும் திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது மாரடைப்பு பிரச்சனையை தடுக்க ஹெல்வாக் சிஸ்டம் கொண்டுவரவுள்ளது. இதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மாரடைப்பு என்பது அனைத்து வயதினருக்கும் ஏற்படும் நோயாக மாறியுள்ளது. இளம் வயதினரையும் மாரடைப்பு நோய் தாக்குகின்றது. மாரடைப்பு நோய் ஏற்படுவதை தடுக்க பல வழிமுறைகள் உள்ளது. இதையடுத்து தமிழக அரசும் மாரடைப்பு நோயை தடுக்க ஹெல்த் வாக் சிஸ்டம் என்ற நடைமுறையை கொண்டுவரவுள்ளது.

இது குறித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் “தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி முதல் ஹெல்த் வாக் சிஸ்டம் கொண்டுவரப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாம்களும் நடைபெறவுள்ளது.

கொரோனா நோய் தொற்றுக்கு பின்னர் மாரடைப்பு இளம் வயதினருககும் அதிகம் ஏற்படுகின்றது. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றால் நடைபயிற்சி மேற்கொள்வது முக்கியம்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ளார்.