யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!!

0
86
#image_title

யூடியூப் பார்த்து கொலை செய்யப்பட்ட மூதாட்டி!!! நகையை பறித்துக் கொண்டு சென்ற மாணவி!!!

ஆந்திராவில் யூடியூப் வீடியோக்களை பார்த்து கல்லூரி மாணவி ஒருவர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்து நகையை பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஜனதாபேட்டை நகரில் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இந்த ஓய்வு பெற்ற விரிவுரையாளர் அவர்களுடன் அவருடைய சித்தி 85 வயதாகும் ரமணம்மா என்பவரும் வசித்து வருகின்றார்.

இந்த நிலையில் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளருக்கு கல்லூரி மாணவியுடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து கல்லூரி மாணவியின் வீட்டுக்கு விரிவுரையாளர் சென்றிருந்த பொழுது தன்னுடைய சித்தி அதிக நகைகளை போட்டிருப்பதாக மாணவியிடம் விரிவுரையாளர் கூறியுள்ளார்.

இதையடுத்து நகைமேல் ஆசைப்பட்ட மாணவி மூதாட்டியை எப்படியாவது கொலை செய்து நகையை பறிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிய மாணவி கொலை செய்வதற்காக தொடர்ந்து யூடியூபில் உள்ள கிரைம் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை(அக்டோபர்23) கல்லூரி விரிவுரையாளர் மற்றும் அவருடைய மனைவி இருவரும் காலையில் நடைபயிற்சி சென்றிருந்த நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்த அந்த கல்லூரி மாணவி மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

அதன் பின்னர் மூதாட்டி அணிந்திருந்த 5 1/2 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த மாணவி சென்றுவிட்டார். நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு வந்த விரிவுரையாளரும் அவருடயை மனைவியும் சித்தி ரமணம்மா அவர்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இது குறித்து காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் பல கட்டங்களில் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. சந்தேகம் அடைந்த காவல் துறையினர் கல்லூரி மாணவியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கல்லூரி மாணவி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அந்த மாணவி மீது காவல் துறையினர் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைத்தனர்.