Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!! 

Tamil Nadu Government: 2 மணி வரை தான் கால அவகாசம்.. தமிழக அரசுக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் தற்பொழுது வரை கட்டவுட் மற்றும் பேனர் விவகாரம் தலை தூக்கி தான் இருந்து வருகிறது. இது குறித்து பல விதிமுறைகள் விதிக்கப்பட்டாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் ஆட்சியில் இருக்கும் அரசே இந்த விதிகளை மீறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்காக சாலைகளில் எங்கும் பேனர் கட்டவுட் போஸ்டர்கள் என்று அனுமதி இன்றி வைத்துள்ளனர். பலமுறை இதை அகற்றக் கோரியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர் கட் அவுட் போன்றவற்றை எடுக்குமாறு கூறியுள்ளனர். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இன்று  2.00 மணிக்குள் பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் கட்டவுட் எடுத்தாக வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல சொந்த காரணத்திற்காக ஒருபோதும் உள்ளாட்சி செயல்படக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தது.

விதிமுறை என்றால் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்று அறிவுறுத்தியது. அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மேற்கொண்டு இந்த வழக்கை இரண்டு மணிக்கு மேல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்து ஒத்தி வைத்துள்ளனர். இந்த பேனர் கலாச்சாரத்தால் தொடர்ந்து தமிழகத்தில் பல உயிர்களை இழந்த போதிலும் தங்களின் சொந்த காரணங்களுக்காக விதிமுறைகளை மீறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.