வாயுத் தொல்லையா? உடனே நீங்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

0
117
#image_title

வாயுத் தொல்லையா? உடனே நீங்க பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்!! 100% தீர்வு கிடைக்கும்!!

நம்மில் பலரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கும் பாதிப்புகளில் ஒன்று வாயுத் தொல்லை. இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாக இருக்கிறது. இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது.

வாயுத் தொல்லை ஏற்படக் காரணங்கள்:-

*செரிமானக் கோளாறு

*உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல்

*மன அழுத்தம்

*முறையற்ற உணவு முறை பழக்கம்

வாயுத் தொல்லை நீங்க வழி:-

*வாசனை நிறைந்த சமையல் பொருட்களான சீரகம், சோம்பு உள்ளிட்டவைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் வாயுத் தொல்லை நீங்கி விடும்.

*எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

*காரம் மற்றும் புளிப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பதன் மூலம் வாயுத் தொல்லையில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

*எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவை உண்பது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி

*இலவங்கம்(கிராம்பு) – 4 முதல் 5

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

வாயுத் தொல்லை நீங்க வீட்டு முறையில் பானம் செய்வது குறித்த செய்முறை விளக்கம் இதோ. முதலில் 1 எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பவுலில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். அடுத்து 4 முதல் 5 இலவங்கம்(கிராம்பு) சேர்த்து கொள்ளவும். பின்னர் வாயுத் தொல்லையை கட்டுக்குள் வைக்க உதவும் முக்கிய பொருளான பெருங்காய கட்டியை பொடி செய்து பயன்படுத்தினாலும் சரி ரெடிமேடாக விற்கப்படும் பெருங்காயத் தூளில் 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து கொண்டாலும் சரி.

தண்ணீரில் இலவங்கம் + எலுமிச்சை சாறு + பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இந்த பொருட்கள் தண்ணீரில் 5 முதல் 10 நிமிடம் வரை ஊற விட்டு பின்னர் பருகவும். இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த கேஸ் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Previous articleநடப்பு சேம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!!! ஒன்பதாவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து!!!
Next articleகழுத்து கருமையை போக்க வேண்டுமா!!? இதோ சில எளிமையான இயற்கையான டிப்ஸ்!!!