நடப்பு சேம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!!! ஒன்பதாவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து!!!

0
30
#image_title
நடப்பு சேம்பியனை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை!!! ஒன்பதாவது இடத்திற்கு சென்ற இங்கிலாந்து!!!
இன்று(அக்டோபர்26) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை லீக் சுற்றில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  தொடர்ந்து 4வது தோல்வியை சந்தித்த நடப்பு சேம்பியன் இங்கிலாந்து புள்ளிப் பட்டியலில் 9வது இடத்திற்கு சென்றுள்ளது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று(அக்டோபர்26) நடைபெற்ற 25வது உலகக் கோப்பை லீக் சுற்றில் நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி இலங்கையை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய இங்கிலாந்து அணி 45 ரன்கள் எடுக்கும் வரை விக்கெட்டுகளை இழக்காமல் ஆடியது. அதன் பின்னர் இங்கிலாந்து அணியின் ஒவ்வொரு விக்கெட்டும் அடுத்தடுத்து விழத் தொடங்கியது.
இதையடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாத இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக  பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுத்தார். பேரிஸ்டோ 30 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் லாஹிரு குமாரா 3 விகாகெட்டுகளையும் அஞ்சலோ மேத்யூஸ்,  ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசால் பிரேரா 4 ரன்களுக்கும் குசால் மென்டிஸ் 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க இலங்கை அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் மற்றொரு தொடக்கவீரர் நிசன்கா அவர்களுடன் இணைந்த சமரவிக்ரமா பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார். பொறுமையாக தொடர்ந்து விளையாடிய நிசன்கா மற்றும் சமரவிக்ரமா இருவரும் அரைசதம் அடித்தனர்.
நிசன்கா 77 ரன்களும், சமரவிக்ரமா 65 ரன்களும் சேர்க்க இலங்கை அணி 25.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடப்பு சேம்பியன் இங்கிலாந்து அணி இந்தாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்விகளால் தடுமாறி வருகின்றது. மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பையும் இழக்கும் நிலையில் நடப்பு சேம்பியனான இங்கிலாந்து உள்ளது.