பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

0
99
#image_title

பொடுகு தொல்லை நீங்கி 2 வாரத்தில் முடி வளர்ச்சி அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்!!

நம்மில் பெரும்பாலானோர் தலை முடி உதிர்வு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம். இதனால் இளம் வயதில் முடி அதிகளவில் உதிர்ந்து முதுமை தோற்றத்தை வெளிப்படுத்தி விடுகிறது.

தலைமுடி உதிர்வுக்கு காரணம்:-

*பொடுகுத் தொல்லை

*மன அழுத்தம்

*ஆரோக்கியமற்ற உணவு முறை

*அதிக இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*முறையற்ற தூக்கம்

*தலை முடி வறட்சி

பொடுகு தொல்லை நீங்கி தலை முடி வளர எளியத் தீர்வு:

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 10

*கடுகு எண்ணெய் – 2 தேக்கரண்டி

*ஆமணக்கு எண்ணெய் – 2 தேக்கரண்டி

*வேப்ப எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

*10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். அடுத்து மிக்ஸி ஜார் எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த சின்ன வெங்காயத்தின் சாற்றை ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும்.

பின்னர் 2 தேக்கரண்டி கடுகு எண்ணெய், 2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலந்து விடவும். அடுத்து 2 தேக்கரண்டி வேப்ப எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

இந்த எண்ணெயை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தேய்த்து கொள்ளவும். தலையில் 20 நிமிடங்கள் வரை இருக்கும்படி விட்டு சீகைக்காய், அரப்பு, பூந்தி கொட்டை பயன்படுத்தி தலையை நன்கு அலசிக் கொள்ளவும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் தலையில் பொடுகு தொல்லை நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்க தொடங்கும்.

Previous articleகாலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Next articleநீங்கள் உங்கள் குலதெய்வ கோயிலுக்குப் போகும் போது இப்படி செய்து இருக்கீங்களா? இல்லையெனில் இனிமேல் கட்டாயம் செய்யவும்!!