மறந்தும் கூட இந்த உணவுகளை இரவில் சாப்பிடக்கூடாது!
மறந்தும் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது சில உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த உணவுகளை நாம் இரவில் சாப்பிடும் பொழுது நமக்கு பலவகையான தீமைகள் ஏற்படும்.
நாம் தூங்கச் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஜீரணம் ஆக நேரம் எடுக்கும். மறுநாள் காலையில் இது மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தும். அந்த வகையில் பல சத்துக்களை அளிக்கக் கூடிய மற்றும் தீமைகளை தரக்கூடிய ஊணவுகளை நாம் இரவு உணவாக எடுத்துக் கொண்டு வருகின்றோம். அந்த உணவுகளை பற்றி தற்பொழுது பார்க்கலாம்.
இரவில் தூங்கச் செல்லும் முன்பு சாப்பிடக் கூடாத உணவுகள்…
* டீ, காபி…
இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன்பு காபி, டீ போன்ற காஃபைன் நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இரவு நேரத்தில் காபி, டீ போன்ற காஃபைன் நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நமக்கு நீரிழிவு நோய், இதய நோய் வரும் அபாயம் உள்ளது.
* கீரை வகைகள்…
கீரை வகைகளில் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இருந்தாலும் நாம் ஒரு சில கீரை வகைகளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது.
* வெண்ணெய், நெய்…
இந்த வெண்ணெய், நெய், சீஸ் போன்ற பொருட்களில் பல வகையான நன்மைகள் இருக்கின்றது. ஆனால் இவை அனைத்தும் நாம் இரவு சாப்பிடும் பொழுது தீமைகளாக மாறி விடுகின்றது. வெண்ணெய், சீஸ், நெய் போன்ற பொருட்களை நாம் குறிப்பிட்ட அளவு மட்டுமே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும் காலை நேரங்களில் எடுத்துக் கூறுவது மிகவும் நல்லது. எனவே இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
* காரம் கொண்ட உணவுகள்…
இரவு நேரத்தில் அதிகம் காரம் கொண்ட உணவுகள், மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் இரவு நேரத்தில் காரம் அல்லது மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நெஞ்செரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர். போன்ற தொல்லைகளை ஏற்படுத்தும்.
* பீட்சா, பர்கர், சிப்ஸ்…
மறந்தும் கூட நாம் சாப்பிடக் கூடாத உணவுகளில் முக்கியமான உணவாக இருப்பது பீட்சா, பர்கர், சிப்ஸ் போன்ற உணவுகள் தான். இந்த உணவுகள் நமக்கு பெரும் சிக்கலை கொடுத்து விடும். நாம் இரவு நேரத்தில் எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது நமக்கு சரும பிரச்சனைகள் உள்பட பல வகையான நோய்கள் ஏற்படும். எனவே இந்த வகையான உணவுகளை சாப்பிடக்கூடாது