மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களா நீங்கள்! உங்களுக்கு எல்லாம் மெசேஜ் வந்துருச்சா!!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு பதிவு செய்து விடுபட்டவர்களில் தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணியை தமிழக அரசு தற்பொழுது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
பெண்களுக்கான சிறப்பு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்திற்கான அனைத்து பணிகளும் தொடங்கி விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டது. மேலும் தகுதியானவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் இந்த திட்டத்தின். ஒரு பகுதியாக 1 ரூபாய், 10 ரூபாய் என்று வங்கி கணக்குக்கு சிறிய தொகை அனுப்பும் வேலை நடைபெற்று வந்தது.
இதையடுத்து கடந்த செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் மாதம் 1000 ரூபாய் அனுப்பும் கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடங்கிய வைத்தார். இதையடுத்து தகுதியான மகளிருக்கு செப்டம்பர் மாதமும் அக்டோபர் மாதமும் தலா 1000 ரூபாய் வங்கி கணக்குகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து தகுதியில்லாத விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்ட பெண்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் அக்டோபர் 25ம் தேதி வரை மேல்முறையீடு அதாவது நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 25ம் தேதி வரை வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 11 லட்சத்து 85 பெண்கள் விண்ணப்பத்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தொடங்கிய நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் முதல் கட்டத்தில் விடுபட்டவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பும் பணி தொடங்கிய நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் தீபாவளிப் பண்டிகை 12ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் நவம்பர் 10ம் தேதிக்குள் வங்கிக் கணக்குகளில் பணம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.