நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

0
108
#image_title

நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய இரயில்வே! மேலும் ஒரு சிறப்பு இரயில் அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இரயில்வே நிர்வாகம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று

நாட்டில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் கூடுதல் விடுமுறை அளிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறும் வகையில் நேற்று(நவம்பர்6) தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது தீபாவளி முடிந்த அடுத்த நாள் திங்கள் கிழமையும் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. தீபாவளி முடிந்து மக்கள் சொந்த ஊரிலிருந்து வேலைக்கு வெளியூர் செல்ல ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள்.

வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு 10500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு பேருந்துகள் அனைத்தும் நவம்பர் 9ம் தேதி முதல் நவம்பர் 11ம் தேதி வரை இயக்கப்படுகின்றது. மேலும் இரயில்களில் முன்பதிவானது 120 நாட்களுக்கு முன்னரே முடிந்த நிலையில் சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் கோரிக்கையின் படி சில தினங்களுக்கு முன்னர் சென்னை சென்ட்ரல் முதல் திருநெல்வேலி வரை சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை சென்ட்ரல் முதல் திருநெல்வேலி வரை நவம்பர் 8, 15, 22 ஆகிய தேதிகளிலும் திருநெல்வேலி முதல் சென்னை சென்ட்ரல் வரை நவம்பர் 9,16, 23 ஆகிய தேதிகளிலும் இரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் மேலும் ஒரு சிறப்பு இரயில் இயக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாகர்கோவில் முதல் பெங்களூரு வரை சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நவம்பர் 7, 14, 21 ஆகிய தேதிகளில் நாகர்கோவில் முதல் பெங்களூரு வரையிலும் மறுமார்க்கமாக நவம்பர் 8,15, 22 ஆகிய தேதிகளில் பெங்களூரு முதல் நாகர்கோவில் வரை இந்த சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

நாகர்கோவில் முதல் பெங்களூரு வரை இயக்கப்படும் சிறப்பு இரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய வழித்தடங்கள் வாயிலாக பெங்களூரு சென்றடையும் என்றும் இந்த சிறப்பு இரயிலுக்கான முன்பதிவு தற்பொழுது அறிவிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.