கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் செய்யுங்கள்!!
கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். நம் குடும்பத்தில் கஷ்டத்தை தரும் கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
கண் திருஷ்டி நீங்கி பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்:-
வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்குள் இதை செய்ய வேண்டும். ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து குறுக்கே இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
இரண்டு கிராம்பு எடுத்து ஒரு பாதி பழத்தின் (உள் பக்கம்) வலது பக்கம் ஒன்று இடது பக்கம் ஒன்று என்ற கணக்கில் குத்தி வைக்கவும்.
இதே போல் மற்றொரு பாதி பழத்தில் செய்யவும். பிறகு, ஒரு பாதி எலுமிச்சம் பழத்தில் மஞ்சள் தடவி மறு பாதியில் குங்குமம் தடவும்.
கிராம்பு, மிளகு எதுவும் வெளியே தெரியாதவாறு முழுமையாக மஞ்சள் குங்குமம் தடவவும்.
பின்பு 2 அகல் விளக்கு எடுத்து மஞ்சள் தடவிய பழத்தை ஒரு அகலிலும், குங்குமம் தடவிய பழத்தை ஒரு அகலிலும் வைக்கவும்.
அடுத்து நிலை வாசலின் வெளியே இரு பக்கமும் இந்த 2 அகல்களை வைத்து விடவும்.
அடுத்த வெள்ளி அன்று இதை மாற்றி பழையதை கால் படாத இடத்தில் போடவும்.
தொடர்ந்து 2 மாதங்கள் செய்து பண வரவில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.