தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

0
92
#image_title

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? அட இது தெரியாம போச்சே!!

நம் உடலுக்கு அதிகளவு ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் பீட்ரூட் கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பீட்ரூட்டில் சட்னி, பொரியல், இனிப்பு வகைகள் என்று பல வகைகளில் செய்து உண்டு வரும் நாம் அதில் ஜூஸ் செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.

தினமும் பீட்ரூட் ஜூஸ் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நமைகள்:-

*பீட்ரூட் ஜூஸில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது.

*இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

*இரத்த சோகை பாதிப்பதால் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு பீட்ரூட் ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

*வயிறு தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் பீட்ரூட்டை ஜூஸ் செய்து பருகலாம்.

*மறதி நோயால் அவதிப்பட்டு வரும் நபர்களுக்கு இந்த ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.

*எலும்பு வலுப்பெற பீட்ரூட் ஜூஸ் பருகுவது அவசியம்.

*உடலில் இரும்புசத்து குறைபாடு இருப்பவர்கள் பீட்ரூட் ஜூஸ் எடுத்து வருவதினால் நல்ல பலன் கிடைக்கும்.

*சருமம் தொடர்பான பாதிப்பு நீங்க பீட்ரூட் ஜூஸ் பாருங்கள்.

பீட்ரூட் ஜூஸ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் – 1

* தேன் – தேவைக்கேற்ப

*எலுமிச்சை பழம் – 1

*இஞ்சி – 1 துண்டு

செய்முறை:-

பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட் துண்டுகள், சுவைக்கேற்ப தேன், இஞ்சி சிறு துண்டு மற்றும் ஒரு முழு எலுமிச்சையின் சாறு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு டம்ளர் எடுத்து அவற்றை ஒரு வடிகட்டி கொண்டு நன்கு பிழிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த பானத்தில் ஐஸ் கியூப் சேர்த்து குடிக்கலாம்.

இந்த பீட்ரூட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தோம் என்றால் இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்மந்தபட்ட நோய் பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

Previous articleவாயில் வைத்ததும் கரையும் கேரள “கருப்பு கவுனி உண்ணியப்பம்” – எவ்வாறு செய்வது?
Next articleவீண் செலவுகளால் பண விரயம் ஏற்படுவது குறைந்து உங்கள் கையில் பணம் தங்க இதை மட்டும் செய்யுங்கள்!!