தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

0
174
#image_title

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது யாரு தெரியுமா! தெலுங்கானா முதல்வர் பரபரப்பு பேட்டி!!

தேர்தலில் அம்பேத்கர் அவர்களை தோற்கடித்தது காங்கிரஸ் கட்சிதான் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் இந்த மாதம் கடைசியில் அதாவது நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளரை ஆதரித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர்.

பாஜக, காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கிடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்கள் தெலங்கானா தேர்தலை முன்னிட்டு சென்னூரில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசினார்.

பிரச்சாரத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் “நவம்பர் 30ம் தேதி நடக்கவிருக்கும் தெலங்கானா தேர்தலில் மக்களே நீங்கள் உங்களின் ஓட்டுக்களை பாடுவதற்கு முன்பாக தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கடந்த கால வரலாற்றை கொஞ்சம் பாருங்கள். அதற்கு பிறகு அடுத்த 5 ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்யப் போவது யார் என்பது குறித்து முடிவு செய்யுங்கள்.

மற்ற கட்சிகள் அனைத்தும் பட்டியலின மக்களை ஓட்டு வங்கியாக பார்க்கிறார்கள். ஓட்டுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். தலித் பந்து திட்டம் என்பது பட்டியலின மக்களுக்கும் அதிகாரங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. தலித் பந்து திட்டத்தின் கீழ் தொடங்க விரும்பும் பட்டியலின மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த தலித் பந்து திட்டம் கடைசி பட்டியலின மக்களை சென்று சேரும் வரை எங்கள் அரசு போராடும்” என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் “பட்டியலின மக்களுக்காக பல போராட்டங்களை நடத்திய அம்பேத்கர் அவர்களை பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்தது யார் என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் அம்பேத்கர் அவர்களை பாராளுமன்றத் தேர்தலில் தோற்கடித்தது. மேலும் அவருடைய சித்தாந்தத்தை அமல்படுத்தவில்லை” என்று பேசினார்.

Previous articleநெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற நடப்பு சாம்பியன்!
Next articleமக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!!