மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!!

0
119
#image_title

மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!! இந்த 4 மாவட்டங்களை சம்பவம் செய்ய காத்திருக்கும் மழை!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரப்பி வருகிறது.

ஆரம்பத்தில் மழைப்பொழிவு குறைவாக இருந்தாலும் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையை மழை வெளுத்து வாங்க தொடங்கியது.

இதனை தொடர்ந்து தற்பொழுது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. இதனால் கேரளா,தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருபதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது.