இளநரை ஒரே வாரத்தில் கருமையாக மாற தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள்!!

0
99
#image_title

இளநரை ஒரே வாரத்தில் கருமையாக மாற தேங்காய் எண்ணெயில் இந்த 3 பொருட்களை சேர்த்து பயன்படுத்துங்கள்!!

இன்றைய சூழலில் இளநரை வருவது என்பது எளிதான பாதிப்புகளில் ஒன்றாகி விட்டது. இதற்கு வாழ்க்கை முறையும், உணவு முறை மாற்றமுமே முக்கிய காரணம் ஆகும்.

இளநரை உருவாகக் காரணங்கள்:-

*ஊட்டச்சத்து இல்ல உணவு

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தல்

*தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருத்தல்

*முறையற்ற தூக்கம்

*மன அழுத்தம்

நரை முடியை கருப்பாக மாற்ற இயற்கை ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய் – 200 மிலி

*கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி

*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு

*கரிசலாங்கண்ணி பொடி – 1 தேக்கரண்டி

எண்ணெய் காய்ச்சும் முறை…

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து அதில் 200 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 2 தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதை சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் சேர்க்கவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் 1 கைப்பிடி அளவு மருதாணி இலைகளை சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதை சூடாகி கொண்டிருக்கும் எண்ணெய் கலவையில் சேர்த்து கிளறவும்.

தேங்காய் எண்ணெயின் நிறம் மாறி வந்ததும் எடுத்து வைத்துள்ள 1 தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியை அதில் சேர்த்து காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் வடிகட்டி சேமித்து வைக்கவும். இந்த மூலிகை எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து வந்தோம் என்றால் இளநரை அனைத்தும் அடர் கருமையாக மாறிவிடும்.

Previous articleதீராத நெஞ்சு சளி தொல்லைக்கு 1/2 மணி நேரத்தில் தீர்வு வேண்டுமா? அப்போ இந்த கஷாயத்தை செய்து பருகுங்கள்!!
Next articleKerala Style Recipe: கேரளா ஸ்டைல் சிக்கன் கறி -ஊரையே கூட்டும் சுவையில் செய்வது எப்படி?