பொடுகுத் தொல்லையை ஒழிக்க வேண்டுமா! இந்த 3 வழிமுறைகளை பயன்படுத்துங்க!!
நம் தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை ஒழிக்க இந்த பதிவில் சிறப்பான மூன்று வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
நம் தலையில் உள்ள பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனை பொடுகு. இந்த பொடியை வந்து விட்டால் முடி உதிர்தல், அரிப்பு, தலையில் புண் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளை தீர்க்க நாம் மருந்துகடைகளில் விதவிதமான மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம். எண்ணெய் வகைகள் வாங்கி பயன்படுத்துவோம். சாம்புகள் வாங்கி பயன்படுத்தி இருப்போம்.
ஆனால் இவற்றால் நம் தலையில் இருக்கும் பிரச்சனை குறைகிறதோ இல்லையோ புதிய பிரச்சனை ஏற்பட்டு விடும். இந்த பொடுகுத் தொல்லை பேனாக மாறுவதற்குள் நாம் இதை ஒழிப்பது நல்லது. இந்த பொடுகுத் தொல்லையை ஒழிக்க தேவையான மூன்று முக்கிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொடுகுத் தொல்லை ஒழிய முக்கியமான 3 வழிமுறைகள்…
* சின்ன வெங்காயத்தை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த இந்த விழுதை தலை தேய்க்க வேண்டும். பிறகு 15 நிமிடம் கழிந்து குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்யும் பொழுது பீடித் தொல்லை நீங்கும். முடி உதிர்தல் பிரச்சனை குறையும்.
* தலையில் பொடுகுத் தொல்லை ஒழிய பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதை தலைக்கு தேய்த்து குளித்து வரும் பொழுது பொடுகுத் தொல்லை ஒழியும்.
* நாம் சாப்பிட பல வகையான கீரை வகைகளை பயன்படுத்தி வருகின்றோம். அதில் ஒன்று பசலைக் கீரை. இந்த பசலைக் கீரையை நாம் தலையில் உள்ள பொடுகுத் தொல்லையை ஒழிக்க பயன்படுத்தலாம். இந்த பசலை கீரையை எடுத்து அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்து குளித்து வருவதன் மூலமாக தலையில் உள்ள பொடுகுத் தொல்லை நீங்கும். மேலும் வாரம் ஒரு முறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.