சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

0
30
#image_title

சர்க்கரை நோய் முதல் பாம்பு கடி வரை அனைத்திற்கும் இந்த ஒரு இலையில் தீர்வு இருக்கிறது!!

இன்றைய கால வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போய்விட்டது. உடலில் தேவையான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும்.

நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள காய்கறிகள், பழங்கள், மூலிகை வகைகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் நாம் அறிந்த பழ வகைகளில் ஒன்றான சீத்தா பழத்தின் இலையை வைத்து சர்க்கரை வியாதி, தோல் நோய், சொத்தைப் பல் வலி, பாம்புக்கடி, வாய் துர்நற்றம், பேன் பொடுகு தொல்லை இரத்த காயம் உள்ளிட்டவைகளை சரி செய்ய முடியும்.

சீத்தா இலையில் உள்ள சத்துக்கள்:-

*பொட்டாசியம்

*தாதுக்கள்

*கால்சியம்

*ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ்

சீத்தா இலையின் பயன்கள்:-

1.இரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்

தேவையான பொருட்கள்:-

*சீத்தா இலை – 3

*தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின்னர் 3 சீத்தா இலையை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளவும்.

இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உடம்பில் ரத்தம் உற்பத்தி அதிகரித்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

2.தோல் வியாதி

தேவையான பொருட்கள்:-

*சீத்தா இலை பொடி – 3 தேக்கரண்டி

*மஞ்சள் தூள் – சிறிதளவு

*உப்பு – சிறிதளவு

செய்முறை:-

சீத்தா இலையை காயவைத்து பொடியாக செய்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பவுல் எடுத்து சீத்தா இலை பவுடர், மஞ்சள் மற்றும் உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலக்கி உடம்பில் அரிப்பு மற்றும் படர்தாமரை உள்ளிட்ட தோல் வியாதி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தோல் தொடர்பான வியாதிகள் குணமாகும்.

3.சொத்தை பல் வலி குணமாகும்

தேவையான பொருட்கள்:-

*சீத்தா இலை – 2

செய்முறை:-

இரண்டு சீத்தா இலைகளை எடுத்து அதை நன்கு கழுவி ஒரு உரலில் போட்டு பேஸ்ட் போல் இடித்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை எடுத்து சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இதனால் சொத்தை பல்லில் தங்கி இருக்கும் புழுக்கள் வெளியேறி நாள்பட்ட பல் வலி குணமாகும்.

4.பேன் மற்றும் பொடுகு பிரச்சனை

தேவையான பொருட்கள்:-

*சீத்தா இலை – 3

*ஊமத்தை இலை – 2

செய்முறை:-

சீத்தா இலை மற்றும் ஊமத்தை இலையை பேஸ்ட் போல் செய்து கொண்டு தலையில் தடவ வேண்டும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து தலையை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கி முடி வளர்ச்சி அதிகமாகும்.

5.வாய் துர்நாற்றம்

சீத்தா இலையை தேவைக்கேற்ப எடுத்துக்கொண்டு அதனை கழுவி வாயில் போட்டு நன்கு மென்று பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும். பிறகு பிரஷ் செய்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து வாய் துர்நாற்றம் குறையும்.

6.பாம்புக்கடி
பாம்பு கடித்தவர்கள் சீத்தா இலையை அரைத்து பேஸ்ட் போல் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் பாம்பின் விஷம் சற்று குறையும்.