தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!

0
105
#image_title

தீபாவளி ஸ்வீட்ஸில் உள்ள நச்சுக்கள் உடலில் தங்கிவிட்டதா! அந்த நச்சுக்களை வெளியேற்ற இதோ சில டிப்ஸ்!!

தீபாவளி முடிந்துள்ள நிலையில் நாம் தீபாவளி நாளன்று அதிக இனிப்பு உணவுகளை சாப்பிட்டு இருப்போம். இந்த இனிப்புகள் முழுவதும் செயற்கை இனிப்புகளை கொண்டு தயார் செய்யப்பட்டது ஆகும். இந்த இனிப்புகளை நாம் அளவோடு சாப்பிட வேண்டும். அளவுக்கு மீறினால் அது பல பிரச்சனைகளை கொண்டு வந்து விடும்.

இந்த செயற்கை சர்க்கரை என்பது நச்சுப் பொருள் உள்ள சர்க்கரை ஆகும். இந்த செயற்கை சர்க்கரையை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகளில் அதிக நச்சுக்கள் உள்ளது. இவை அனைத்தும் நம் உடலில் தங்கி விடும். இதை வெளியேற்றாமல் விட்டால் பல்வேறு வகையான உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

இவை நம் உடலில் தங்கி உடல் எடையை அதிகரித்து விடுகின்றது. எனவே மக்கள் தீபாவளிக்கு பின்னர் ஸ்வீட்களை சாப்பிட்டு அதன் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் வழிமுறைகளை மக்கள் அனைவரும் தேடுஙிறார்கள். அதற்கான சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்வீட்ஸ் மூலம் உடலில் தங்கியுள்ள பேச்சுக்களை வெளியேற்ற உதவும் வழிமுறைகள்…

* இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தீபாவளி முடிந்த பிறகு உடலை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிட வேண்டும். இறைச்சி, மீன் போன்ற உணவுகள் செரிமானம் ஆவதற்கு சமயம் எடுக்கும் என்பதால் இதற்கு பதிலாக புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த சைவ உணவுகளை சாப்பிடலாம்.

* நார்ச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். தீபாவளிக்கு பின்னர் உடலில் உள்ள மூலை முடுக்குகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு நார்ச் சத்துக்கள் நிறைந்த வெள்ளரிக்காய், சாலட், கேரட், முளைக்கட்டிய பயிர்கள், கீரைகள் ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் செரிமான மண்டலம் பலம் அடைந்து அதன் செயல்பாடு சீரடையும். மேலும் உடலில் உள்ள நச்சுக்களும் உடனே வெளியேறும்.

* தீபாவளிக்கு பிறகு உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை குடிக்கலாம். அதாவது ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து சர்க்கரை அல்லது உப்பு எதுவும் சேர்க்காமல் குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால் உடலில் உள்ள பேச்சுக்களை அனைத்தும் வெளியேறி விடும்.

* தீபாவளிக்கு பின்னர் உடலில் தேங்கியுள்ள பேச்சுக்களை நீக்க அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரு நாளுக்கு குறைந்தது 8 முதல் 9 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பொழுது உடல் அதிக நீரேற்றத்துடன் இருக்கும். மேலும் உடலில் தேங்கியுள்ள அனைத்து நச்சுக்களும் வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

* செயற்கை சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளை நாம் ஏற்கனவே சாப்பிட்டு அந்த பேச்சுக்களை வெளியேற்ற நாம் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றோம். இந்த வேலையில் மேலும் நாம் செயற்கை இனிப்புகளை கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடும் பொழுது மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கோலா பானங்கள், பேக்கரி உணவுகள், இனிப்பு வகைகள் இவை அனைத்தையும் தீபாவளிக்கு பிறகு 2 வாரங்கள் வரை சாப்பிடாமல் இருக்க வேண்டும். அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் தீபாவளிக்கு சாப்பிட்ட இனிப்புகள் மூலமாக உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறிவிடும்.

Previous articleKerala Style Recipe: கேரளா ஸ்பெஷல் ‘பொடித்தூவல்’ – சுவையாக செய்வது எப்படி?
Next articleகல்வி தகுதி: டிப்ளமோ! BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய நவம்பர் 30 இறுதி நாள்!!