Kerala Style Recipe: மணத்தை கூட்டும் தேங்காய் சாதம்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!

0
150
#image_title

Kerala Style Recipe: மணத்தை கூட்டும் தேங்காய் சாதம்.. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்!!

தேங்காய் சாதம் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்த தேங்காய் சாதத்தை கேரளா ஸ்டைலில் செய்தால் தேங்காய் சாதம் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட விரும்பி உண்பார்கள்.

தேவையான பொருட்கள்:-

*அரிசி – 1 கப்

*துருவிய தேங்காய் – 1/2 கப்

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*கடலை பருப்பு – 1 தேக்கரண்டி

* முந்திரி – 1/4 கப்

*▢உளுந்த பருப்பு – 1 தேக்கரண்டி

*வர மிளகாய் – 8

*பெருங்காயத் தூள் – 1/4 தேக்கரண்டி

*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*கருவேப்பிலை – 1 கொத்து

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் அரிசியை நன்றாக 1/2 மணிநேரம் ஊற வைத்து சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி கொள்ளவும். பின்னர் சாதத்தை தட்டில் போட்டு உலர வைக்கவும்.

அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அடுத்து துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் அளவிற்கு வதக்கவும்.

இந்த கலவையானது ஓரளவு பொன்னிறமாக வந்ததும் அறவைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்கவும். இவ்வாறு செய்தால் தேங்காய் சாதம் அதிக மணம் மற்றும் சுவையில் இருக்கும்.

Previous articleதீராத மலச்சிக்கல் பாதிப்பு சரியாக இதை ஒரு கிளாஸ் பருங்குங்கள்!! அடுத்த 1/2 மணி நேரத்தில் முழு தீர்வு கிடைக்கும்!!
Next articleவீட்டில் பணத் தட்டுபாடு மற்றும் கண் திருஷ்டி நீங்க எளிய பரிகாரம்!! இப்படி செய்தால் 100% பலன் கொடுக்கும்!!