தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

0
92
#image_title

தினமும் 1 கிளாஸ் “கொத்தமல்லி விதை டீ” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் உணவின் வாசனையை கூட்டும் கொத்தமல்லி ஒரு மூலிகை ஆகும். இவை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

கொத்தமல்லி விதையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:-

இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், புரோட்டீன், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்டவைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த கொத்தமல்லி விதையை வைத்து தேநீர் செய்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.

கொத்தமல்லி விதை தேநீர் பயன்கள்:-

** கொத்தமல்லி விதையில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கண் தொடர்பான நோய் பாதிப்பை சரி செய்ய உதவுகிறது.

**தினமும் கொத்தமல்லி டீ பருகுவதன் மூலம் உடல் எலும்பு வலுப்பெறும்.

**பெண்கள் ஏற்படும் வெள்ளைப்படுதல் பாதிப்பை சரி செய்ய கொத்தமல்லி டீ பெரிதும் உதவுகிறது.

**இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கொத்தமல்லி டீ பருகுவது நல்லது.

**இரத்த சோகை பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு கொத்தமல்லி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை சரி செய்ய கொத்தமல்லி டீ பெரிதும் உதவும்.

**உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் பானமாக இவை இருக்கிறது.

**மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

**செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு கொத்தமல்லி டீ சிறந்த தீர்வாக இருக்கும்.

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொத்தமல்லி டீ வழங்குகிறது.

கொத்தமல்லி விதை டீ தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கொத்தமல்லி விதை

*பனங்கற்கண்டு

*தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 1 தேக்கரண்டி அளவு இடித்த கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும்.

இதைத் தொடர்ந்து சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும்.

Previous articleஜான் ஏறினால் முழம் சறுக்குது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்தால் 1 மாதத்தில் பலனைக் காண முடியும்!!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்.. புது தாலிக் கயிற்றை அணிந்த பின் பழைய கயிற்றை என்ன செய்ய வேண்டும்?