பள்ளி மாணவர்களே.. உங்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தேர்வு முடிந்து 12 நாட்கள் விடுமுறை?

0
112
#image_title

பள்ளி மாணவர்களே.. உங்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தேர்வு முடிந்து 12 நாட்கள் விடுமுறை?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பப்ளிக் எக்ஸாம் தேதி, ரிசல்ட் தேதி உள்ளிட்டவைகள் குறித்து பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில் தற்பொழுது அரையாண்டு தேர்வுக்கான தேதி, தேர்வு முடிந்து மாணவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறை குறித்த விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதேபோல் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 11 ஆம் தேதி ஆரம்பமாகி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

மேலும் அரையாண்டு தேர்வு முடிந்து 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 11 நாட்களுக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்களுக்கும் தேர்வு விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. வருகின்ற 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு தினம் வரை இந்த விடுமுறை அளிக்கப்பட உள்ளது என்றும் ஜனவரி 2 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயக்கும் என்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ள அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஅடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா?
Next articleசேலம் மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்.. காம பூசாரியால் பறிபோன பெண்ணின் உயிர்!!