அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா?

0
103
#image_title

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களை பதம் பார்க்க காத்திருக்கும் கனமழை!! இந்த லிஸ்டில் உங்கள் மாவட்டம் உள்ளதா?

தமிழகம் மற்றும் புதுவையை கடந்த சில வாரங்களாக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் அதன் பின் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது.

தமிழகத்தின் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று கடந்த சனிக்கிழமை அன்று வடக்கு ஒரிசா – மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் கரையைக் கடந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் வருகின்ற 21 ஆம் தேதி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 கடலோர மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதால் அம்மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கு வேண்டுமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.