மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!
இன்றைய நவீன உலகில் பெரும்பாலனோர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகிறோம். இவை நமக்கு தாங்க முடியாத வலியை கொடுப்பதோடு வேலைகளை செய்ய இயலாமல் செய்து விடுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த இந்த மூட்டுவலி தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் படுத்தி எடுக்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியம்.
மூட்டு வலி வரக் காரணங்கள்:-
*ஆரோக்கியமற்ற உணவு
*ஜவ்வு தேய்மானம் ஆகுதல்
*எலும்பு தேய்மானம் ஆகுதல்
*வயது மூப்பு
*வேலை பளு
*உடல் பருமன்
இதை சில மூலிகைகளை வைத்து இயற்கை முறையில் குணப்படுவது நல்லது.
1)திரிபலா
இவை சிறந்த நச்சு நீக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. இந்த திரிபலா மூட்டு ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.
2)பறங்கி சாம்ராணி
இவை அலர்ஜி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த பறங்கி சாம்ராணி மூட்டு வலியை போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது.
3)குக்குலு
ஆயுர்வேதத்தில் குக்குலு சிறந்ததாக கருதப்படுகிறது. இது உடலின் அலர்ஜி உண்டாவதை கட்டுப்படுத்துவதோடு மூட்டு வலியை குணமாக்க உதவுகிறது.
4)வெந்தயம்
வெந்தயத்தை வறுத்து பொடி செய்து காலை, மாலை உணவு உண்டவுடன் சூடு நீரில் 1/2 தேக்கரண்டி அளவு கலந்து பருகினால் முழங்கால் மூட்டு வலி விரைவில் சரியாகும்.
5)அஸ்வகந்தா
மூட்டு வீக்கம், மூட்டுகளில் வலி இதில் பாதிக்கப்பட்டவர்கள் அஸ்வகந்தாவை பயன்படுத்தினால் மூட்டில் உள்ள வலி குறைகிறது.
6)இஞ்சி
இந்த இஞ்சி அலர்ஜி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது மற்றும் மூட்டு வலியைப் போக்க உதவும். இதை தேநீர் வடிவில் உட்கொள்ளலாம் அல்லது உணவில் சேர்க்கலாம்.