தலையில் உள்ள நரைமுடி ஒரே நாளில் அடர் கருமையாக மாற வேண்டுமா? அப்போ இந்த பேஸ்டை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

0
169
#image_title

தலையில் உள்ள நரைமுடி ஒரே நாளில் அடர் கருமையாக மாற வேண்டுமா? அப்போ இந்த பேஸ்டை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

நம் தலையில் வெள்ளை முடி எட்டி பார்க்கத் தொடங்கிவிட்டால் இளமை தோற்றம் குறைந்து விடும். தலை முடி இளம் வயதில் நரைக்க ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் காரணங்களாக சொல்லப்பட்டாலும் தலை முடியை சரியாக பராமரிக்காமல் இருப்பதும் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.

இளநரை ஏற்படக் காரணங்கள்:-

*மன அழுத்தம்

*சத்து குறைபாடு

*தலை முடியை முறையாக பராமரிக்க தவறுதல்

*முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்

*இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகித்தால்

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*இண்டிகோ பவுடர் – 3 தேக்கரண்டி

*ஹென்னா பவுடர் – 3 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

ஹேர் டை தயாரிக்கும் முறை…

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி இண்டிகோ பவுடர் எ(அவுரிப் பொடி), 3 தேக்கரண்டி ஹென்னா பவுடர்(மருதாணி பொடி) மற்றும் 2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதை காற்றுப்புகாதவாறு முந்தின நாள் இரவு ஊற விட்டு மறுநாள் காலையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பின்னர் இந்த பேஸ்டை தலைமுடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு பின்னர் சீயக்காய் அல்லது மைலடான ஷாம்பு உபயோகித்து தலையை அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வது வருவதன் மூலம் தலையில் காணப்படும் நரை, இளநரை முழுவதும் கருமையாக மாறிவிடும். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் நமக்கு ஏற்படாது.

Previous articleபண மழையில் நனைய ஆசையா? அப்போ இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்யுங்கள்!!
Next articleABC ஜூஸ் தெரியும்.. அது என்ன PBC ஜூஸ்? பெண்களுக்கான வரப்பிரசாதம் இது!!