“கருப்பு எள்” இருந்தால் போதும்.. ஒரே நாளில் மூட்டு வலிக்கு குட் பாய் சொல்லிடலாம்!!
மூட்டு வலி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக உருவெடுத்து வருகிறது. இந்த பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் சிறு வேலை கூட செய்ய மிகவும் கடினமாக இருக்கும். இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் பின்னாளில் பல ஆபத்தை சந்திக்க நேரிடும்.
இந்த மூட்டு வலி நாளடைவில் அதிகபடியான சோர்வு, எடை இழப்பு, மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும். இவற்றை இயற்கை முறையில் சரி செய்வது சிறந்த தீர்வாக இருக்கும்.
தீர்வு: 1
தேவையான பொருட்கள்:-
*கருப்பு எள்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி அளவு கருப்பு எள் சேர்த்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி
முந்தின நாள் இரவு ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் எள் ஊறவைத்திருக்கும் தண்ணீரை குடித்து வருவதன் மூலம் நாள்பட்ட மூட்டு வலி குணமாகும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு
*சுக்கு
*வேப்ப எண்ணெய்
செய்முறை:-
ஒரு கிண்ணத்தில் இடித்த சுக்கு, சிறிதளவு வேப்ப எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து
பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
அடுத்து மூட்டுகளில் வலி, வீக்கம் இருக்கும் இடங்களில் இந்த பேஸ்டை தடவி நன்கு மஜாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி, வீக்கம் சில நாட்களில் சரியாகி விடும்.