வறட்சியான முடி பளபளப்பாக மாற ஆலிவ் ஆயிலை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

வறட்சியான முடி பளபளப்பாக மாற ஆலிவ் ஆயிலை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!

நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும். அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி பாருங்கள் முடி மிகவும் பளபளப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை ஜெல் – 3 தேக்கரண்டி

*ஆலிவ் எண்ணெய் – 2 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

செய்முறை…

முதலில் ஒரு கிண்ணத்தில் 2 ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

அடுத்து ஒரு கற்றாழை மடல் எடுத்து தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை எடுத்து ஆலிவ் ஆயில் சேர்த்துள்ள கிண்ணத்தில் கலந்து விடவும்.

இதை கூந்தல் முழுக்க தடவி சுமார் 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு நன்கு அலசி கொள்ளவும்.

நாம் உபயோகிக்கும் கற்றாழை ஜெல் ஒரு நல்ல ஹேர் கண்டிஷனராக செயல்படும் தன்மை கொண்டது. அதேபோல் எலுமிச்சை சாறு தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது. ஆலிவ் ஆயில் தலைமுடியை மென்மையாக மாற்றுவதோடு நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்க உதவுகிறது.