வெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா..? 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!
இன்றைய நவீன உலகில் ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை நரை. அதிலும் இளநரை பாதிப்பால் சிறு வயதிலேயே வயதான தோற்றத்தை பெற்று விடுகிறோம். இதற்கு வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை, தலைக்கு ரசாயன ஷாம்பு உபயோகிப்பது, மன அழுத்தம், முறையற்ற தூக்கம் போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இந்த வெள்ளை நரை பிரச்சனையை இயற்கை முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தீர்வு காண்பது மிகவும் நல்லது
தேவையான பொருட்கள்:-
*கடுகு எண்ணெய்
*எலுமிச்சை சாறு
*கறிவேப்பிலை
செய்முறை…
அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 5 தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
பின்னர் அதில் 15 கருவேப்பிலை இலையை சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும். எண்ணெய் சூடு ஆறியதும் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி அப்ளை செய்து கொள்ளவும். 2 மணி நேரத்திற்கு பிறகு தலை முடியை ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை செய்து வருவதன் மூலம் வெள்ளை முடி அனைத்தும் கருமையாக மாறி விடும்.