பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் ட்ரை பண்ணுங்கள்..!!

0
208
#image_title

பாத்ரூம் டைல்ஸில் படிந்துள்ள மஞ்சள் கறை 5 நிமிடத்தில் நீங்க வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் ட்ரை பண்ணுங்கள்..!!

நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொண்டால் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாது. தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் நீக்கி விடலாம்.

தீர்வு 01:

தேவையான பொருட்கள்:-

*போராக்ஸ் தூள்

*ஸ்பாஞ்

செய்முறை…

ஒரு ஸ்பாஞ்சில் தண்ணீர் ஊற்றி ஈரமாக்கி கொள்ளவும். பின்னர் அதில் போராக்ஸ் தூளை கொட்டி பாத்ரூமில் மஞ்சள் கறை படிந்த இடத்தில் தேய்த்து தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் மஞ்சள் கறை, உப்பு கறை நீங்கும்.

தீர்வு 02:

தேவையான பொருட்கள்:-

*கோலமாவு

*ஸ்பாஞ்

செய்முறை…

பாத்ரூம் முழுவதும் கோலமாவு பொடியை தூவி விடவும். 10 நிமிடங்களுக்கு பின்னர் ஸ்பாஞ் கொண்டு தேய்த்து கழுவினால் மஞ்சள் கறை, பாசி, உப்பு கறை உள்ளிட்டவைகள் நீங்கி டைல்ஸ் பளிச்சிடும்.

தீர்வு 03:

தேவையான பொருட்கள்:-

*சோடா உப்பு

*தூள் உப்பு

*எலுமிச்சை சாறு

செய்முறை…

பாத்ரூமில் சோடா உப்பு மற்றும் தூள் உப்பு தூவி விடவும். பின்னர் தேவையான அளவு எலுமிச்சை சாறு எடுத்து பாத்ரூம் முழுவதும் தெளித்து விடவும். 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் பாத்ரூமில் உள்ள மஞ்சள் கறை, உப்பு கறை, பாசி உள்ளிட்டவைகள் நீங்கி டைல்ஸ் புதிது போன்று பளிச்சிடும்.

Previous articleவெள்ளை முடியை இயற்கை முறையில் கருமையாக்க வேண்டுமா..? 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!!
Next articleதெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் வீட்டிற்கு பூரான் வருகை தருவது நல்லதா? கெட்டதா?