சமையல் பாத்திரம் கருகி விட்டதா..? இதை கை வைக்காமல் பளிச்சென்று மாற்ற இந்த ஐடியாவை பாலோ பண்ணுங்க..!!
சமைக்கும் பொழுது கவனம் சிதறினால் அவை நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும். சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேளை அவை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும். பாத்திரமும் வீணாகி விடும். அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் கையின் நிலைமையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.
நாம் அதிகம் அடிபிடிக்க வைக்கும் பாத்திரம் என்றால் அது பால், டீ வைக்கும் பாத்திரம் தான். இதனால் பாத்திரம் மட்டுமல்ல அடுப்பும் சேர்ந்து நாசமாகிடும். இதனால் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் டீ வைக்கும் பாத்திரம் கருகிய நிலையில் தான் இருக்கும்.
இந்த அடிபிடித்து கருகிய பாத்திரத்தை கை நோகாமல் சுத்தம் செய்ய ;கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றவும்.
தேவையான பொருட்கள்:-
*உப்பு
*கோக்
* சோப்
செய்முறை…
முதலில் பாத்திரம் துலக்க உபயோகிக்கும் சோப் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். இதை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் துருவி வைத்துள்ள சோப்பை சேர்க்கவும். அடுத்து அதில் 1 பாட்டில் கோக்கை ஊற்றிக் கொள்ளவும். பின்னர் இதனுடன் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
இந்த கலவையை நன்கு கொதிக்க விட்டு பின்னர் 1/4 டம்ளர் தண்ணீரில் 2 தேக்கரண்டி கல் உப்பை கலந்து கொதிக்கும் கலவையில் சேர்த்துக் கொள்ளவும்.
இவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆற விடவும். பின்னர் இதை ஒரு டப்பாவில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து கெட்டியாக்கி கொள்ளவும். இந்த சோப்பை வைத்து அடி பிடித்த பாத்திரங்களை துலக்கினால் அவை சில நிமிடத்தில் புத்தம் புதிது போன்று பளிச்சிடும்.