வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!!

0
89
#image_title

வாயை திறந்தாலே துர்நாற்றம் வீசுதா? அப்போ இது தான் தீர்வு!!

நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை பற்றி வெளியில் சொல்ல முடியாமல் பலரும் இன்னல்களை சந்தித்து வருகின்றோம்.

சிலருக்கு பல் துலக்கினாலும், துலக்கா விட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படும். இந்த வாய் துர்நாற்றத்தை சரி முடியாமல் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.

வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணங்கள்:-

*சைனஸ்

*சிகரெட் பிடித்தல்

*பற்களை நன்கு துலக்காதது

*பற்களில் கறை இருத்தல்

*நாக்கில் வெள்ளை படலம் படிதல்

*பற்களில் வீக்கம்

*வாய்ப்புண் பிரச்சனை

*ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி

*அல்சர்

*தவறான உணவுமுறை பழக்கம்

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்…

1)தினமும் காலை, இரவு என இரு நேரத்திலும் பல் துலக்க வேண்டும். பல் துலக்கியப் பின்னர் பட்டை, இலவங்கத் தூள் கலந்த தண்ணீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.

2)உணவு உட்கொண்ட பின்பு தண்ணீர் கொண்டு வாயை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பற்களில் சிக்கி கொண்டிருந்த உணவுத் துகளால் வெளியேறி விடும்.

3)வேப்பிலை பொடியில் பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் ஏற்படாது.

4)தினமும் நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுப்படுத்த முடியும்.

5)புதினா இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

6)ஏலக்காயை சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் அகலும்.

7)நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலங்களை டங்க் க்ளீனர் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய முடியும்.

8)அடிக்கடி பழங்களை உட்கொண்டு வருவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

Previous articleஉப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!!
Next articleஇப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!