முகம் அதிக பொலிவுடன் இருக்க இதை ட்ரை செய்து பாருங்கள்..!!

Photo of author

By Divya

முகம் அதிக பொலிவுடன் இருக்க இதை ட்ரை செய்து பாருங்கள்..!!

முகம் பொலிவாக இருந்தால் கூடுதல் அழகு கிடைக்கும். இந்த பொலிவு கிடைக்க நாமும் பல வித முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். இரசாயனம் கலந்த க்ரீம், பவுடர், பேஸ் பேக் என்று நாம் முகத்தை பொலிவாக காட்ட பயன்படுத்தும் இந்த பொருட்காளால் சருமத்தில் பல பக்க விளைவுகள் ஏற்படும். இதனை தவிர்த்து இயற்கை பொருட்களை வைத்து முகத்தை பொலிவு பெறச் செய்வது சிறந்த தீர்வாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*பால்

*கஞ்சி

*அரிசி பொடி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை ஆறிய பிறகு 1 கப் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை அடுப்பில் வைத்து 1/2 டம்ளர் பால் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

அரிசி மாவு 2 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆற வைக்க வேண்டும். பிறகு ஒரு ஏர் டைட் டப்பாவில் ஊற்றி இவற்றை 4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். செய்து வைத்துள்ள கலவையில் 2 தேக்கரண்டி எடுத்து ஒரு பவுலில் போட்டு கொள்ள வேண்டும்.

இந்த க்ரீமை பயன்படுத்துவதற்கு முன் முகத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு முகத்தில் போட்டு நன்கு மஜாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம் என்றால் சரும சுருக்கம், முகத்தில் படிந்துள்ள அழுக்கு போன்றவை நீங்கி முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும்.