2 மணி நேரத்தில் நரை முடி அனைத்தும் கருப்பாக மாற இந்த இயற்கை ஹேர் டையை பயன்படுத்துங்கள்..!!
நரை முடி பிரச்சனையை இன்று பெரும்பாலானோர் சந்தித்து வருகிறோம். இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் ஆகும். 30 வயதுக்குள் இளநரை பாதிப்பு ஏற்படத் தொடங்கி விட்டால் வயதான தோற்றத்தை கொடுத்து விடும். இந்த நரை பாதிப்பை சரி செய்வதற்காக கெமிக்கல் கலந்த பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான பொருட்களை கொண்டு டை தயார் செய்து தலைக்கு உபயோகிப்பது நல்லது.
தேவையான பொருட்கள்:-
*மருதாணி
*அவுரி
*கறிவேப்பிலை
*செம்பருத்தி இலை பொடி
செய்முறை:-
ஒரு பவுலில் 2 தேக்கரண்டி மருதாணி பொடி மற்றும் 5 தேக்கரண்டி அவுரி பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து 1 தேக்கரண்டி செம்பருத்தி இலை பொடி மற்றும் 1 தேக்கரண்டி கறிவேப்பிலை இலை பொடி சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் சிறிதளவு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும். இந்த பேஸ்டை 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின்னர் கையுறை போட்டுக் கொண்டு இந்த ஹேர் டையை தலை முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். 1/2 மணி முதல் 3/4 மணி நேரம் வரை தலையில் ஊற வைத்து பின்னர் மைல்டானா ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு செய்தால் நரை முடி அணைத்தும் கருமையாக மாறி விடும்.