மழை அலர்ட்: அடுத்த 3 மணி நேரத்தில் 18 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தின் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வரும் காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
அதன்படி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மேலும் நாளை அதாவது டிசம்பர் 17 அன்று கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், விழுப்புரம், திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் புறநகர் பகுதியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.