அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்திற்கு கனமழை கன்பார்ம் – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கிய பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே கடந்த நவம்பர் இறுதியில் வங்கக் கடல் பகுதியில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டி எடுத்து விட்டு சென்றது.
இதன் தாக்கம் குறையாத நிலையில் அடுத்து குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியிருக்கும் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியாதல் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேய் மழை பெய்து உலுக்கி எடுத்து விட்டது.
விடாது பெய்த பேய் மழையால் ஏரிகள் உடைந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழுந்து இருக்கிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
குமரிக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது இன்று நகர்ந்து லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது. இதனால் வட மற்றும் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.