முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள 3 முத்தான குறிப்புகள்..!!

0
632
#image_title

முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள 3 முத்தான குறிப்புகள்..!!

நம் அனைவருக்கும் முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள ஆசை இருக்கும். இதற்காக இரசாயானம் கலந்த கண்ட க்ரீம் பயன்படுத்தி வந்தால் முக அழகு விரைவில் கெட்டுவிடும். முகத்தை அழகாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது.

குறிப்பு 01:-

தேவையான பொருட்கள்:-

*தேன்

*எலுமிச்சை சாறு

*பேக்கிங் சோடா

செய்முறை…

1 ஸ்பூன் சுத்தமான தேனை முகத்தில் தடவி 10 நிமிடங்களுக்கு பின்னர் வெந்நீர் கொண்டு முகத்தை கழுவிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி நன்கு மஜாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் நீரில் கழுவிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தோம் என்றால் முகம் பளபளப்பாக மாறும்.

குறிப்பு 02:-

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை

*மஞ்சள்

*கடலை மாவு

செய்முறை..

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் இதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவாகவும், அழகாகவும் மாறும்.

குறிப்பு 03:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் எண்ணெய்

செய்முறை…

இரவு தூங்கச் செல்வதற்கு முன் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து முகத்தில் அப்ளை செய்து பின்னர் மறுநாள் காலையில் முகத்தை வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.